நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் interact கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வானது கல்லூரியின் மகிந்தோதயா தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டிடத்தில் இடம்பெற்றது. இன்று (24) காலை 09.00 மணிக்கு ஆரம்பமான இந்த இரத்ததான நிகழ்வில் பலரும் பங்கேற்று இரத்தம் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
கல்லூரியின் முதல்வர் எஸ்.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கிய குறித்த நிகழ்வானது பாடசாலையின் உப அதிபர் ஆசிரியர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் பங்கேற்போடு சிறப்பாக இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இரத்த தானம் வழங்கிய கொடையாளிகளுக்கு நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் தொடர்ச்சியாக இது போன்ற வினைத்திறன் மிக்க பல்வேறு செயடிதிட்டங்கள் நடைபெற உள்ளதோடு இவ்வாறு இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம் இலங்கையின் இரத்த வங்கிக்கு உதவ கூடியதாக இருக்கும் என்று எமது ஊடகத்திற்க்கு கருத்து தெரிவித்த உப அதிபர் திருச்செல்வம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பாடசாலைக்குள் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் போது எதிர்காலத்தில் தயக்கமில்லாமல் முன்வந்து இரத்த தானத்தை எம்மால் வழங்க முடியும் என்றும் இதனை ஏற்பாடு செய்திருந்த interact கழகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அறிவோசை ஊடக பிரிவின் மாணவ ஊடக பேச்சாளர் எமக்கு கருத்து தெரிவித்தார்.
(ராசையா கவிஷான்)