வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம்- வண்ணார் பண்ணை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்
தமிழரசர் தலைநகரில் வீற்றிருக்கும் தாயே
தடங்கலற்ற நல்வாழ்வை அளித்திடுவாய் நீயே
தெளிவான வழிகாட்டி வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே
வெற்றிகளைத் தந்திங்கு வீற்றிருக்கும் தாயே
வீரமிகு பெருவாழ்வை அளித்திடுவாய் நீயே
வெற்றி நடை போட்டு எம்மை வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே
அழகுமிகு திருக்கோயில் வீற்றிருக்கும் தாயே
அச்சமில்லா நல்வாழ்வை அளித்திடுவாய் நீயே
அன்பு கொண்டு அரவணைத்து வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே
வாளேந்தி காவல் செய்து வீற்றிருக்கும் தாயே
வாழ்வினிலே குறைவின்றி வாழும்வழி அளித்திடுவாய் நீயே
வாழ்த்தி யெம்மை அன்பு செய்து வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே
கேட்கும் வரம் தந்திடவே வீற்றிருக்கும் தாயே
காவலாய் இருந்தென்றும் நலம் அளித்திடுவாய் நீயே
குறைகளைந்து நிறைவு தந்து வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே
தீமைகளைப் போக்கிடவே வீற்றிருக்கும் தாயே
தூய நல்ல வாழ்வினையே அளித்திடுவாய் நீயே
தொல்லையில்லா நல்வாழ்வு தந்து வாழவைக்க வேண்டும்
வண்ணை வீரமாகாளி அம்மா என்றும் எமக்கருள்வாய் நீயே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.