Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

September 21, 2026

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

September 21, 2026

பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

ThanaBy ThanaSeptember 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

எதிர்காலத்தில் இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாகக் கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (19) நாள் முழுவதும் ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு பொருந்தும் கண்ணாடிகள் வழங்கும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன், தனியார் துறையின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற கண்ணாடிச் சட்டங்களை (பிரேம்கள்) பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழினுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் தடையின்றி கல்வி கற்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதே ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எதிர்காலத்தில் இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் மற்றும் அந்த நன்மைகள் கிடைக்க வேண்டிய உரிய நபர்களையுமே சென்றடைகின்றது எனச் சுட்டிக்காட்டிய ரோஷன் கமகே, சிறந்த முகாமைத்துவத்தின் காரணமாக ஜனாதிபதி நிதியம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% பலமடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மூக்குக் கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்குகின்ற இந்த திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் ரோஷன் கமகே நன்றிகளையும் தெரிவித்தார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (மாணவர் சேவைகள்) டி.எம். ஜெயகொடி மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-09-19

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026

    கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

    September 21, 2026
    Editors Picks

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.