லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட புதிய எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சந்தையில் நிலவி வந்த லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து எரிவாயுத் தொகுதிகள் தரையிறக்கப்பட்டவுடன், இன்றைய தினத்திலிருந்து (28) சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை போன்று நாடு முழுவதும் உள்ள லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் ஊடாக தங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தாமதங்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் அச்சமடையத் தேவையில்லை என்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கையிருப்பு சந்தைக்கு வந்தடைவதன் மூலம், நீண்ட வரிசைகளில் காத்திருந்த வாடிக்கையாளர்களின் சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
