Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 19, 2026

உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

August 19, 2026

எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் பெரும் விபத்துத் தவிர்ப்பு: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
Breaking

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் பெரும் விபத்துத் தவிர்ப்பு: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

ThanaBy ThanaMarch 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​நுவரெலியா: நுவரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார் வாகனத்தினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்று (18.03.2026) மாலை 05.02 மணியளவில், சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது, வலது திசையிலிருந்து மிக அதிவேகமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வந்த மோட்டார் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியை மோதவிருந்தது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் (Dash Cam) மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் மோசமான முறையில் அந்த வாகனம் செலுத்தப்பட்டது, ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தனர்.
​
தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்த ஆலயப் பகுதியில், வாகனங்கள் இவ்வாறான பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாதசாரி கடவைகளில் வேகக்கட்டுப்பாடின்றி பயணிப்பது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார யாப்பா அவர்களிடம் வினவியபோது:
​”முச்சக்கர வண்டியின் கமராவில் வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏனைய பாதுகாப்பு கமராவினை ஆய்வு செய்து வருகிறோம். விதிகளை மீறிச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் விரைவில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவோம்,” என உறுதியளித்தார்.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

​செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா, நுவரெலியா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026
    Editors Picks

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026

    ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 1.13 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

    August 19, 2026

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026

    எல் நினோ காலநிலை-வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.