Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சதொசவில் 100 பொருட்களுக்கு அதிரடி விலைக்கழிவு: கார், மோட்டார் சைக்கிள் வெல்லும் வாய்ப்பு!
Breaking

சதொசவில் 100 பொருட்களுக்கு அதிரடி விலைக்கழிவு: கார், மோட்டார் சைக்கிள் வெல்லும் வாய்ப்பு!

ThanaBy ThanaMarch 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகையான பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

விலை விபரங்கள் (ஒரு கிலோகிராம்):

  • வெள்ளை நாடு: ரூ. 217

  • வெள்ளைப்பச்சை அரிசி: ரூ. 203

  • கோதுமை மா: ரூ. 254

  • பருப்பு: ரூ. 264

  • பெரிய வெங்காயம்: ரூ. 150 – 160

  • நெத்தலி: ரூ. 1,050

நிபந்தனைகள் மற்றும் கொள்வனவு வரம்பு

இந்த விலைக்கழிவுச் சலுகையானது சாதாரண நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பொருளுக்கும் கொள்வனவு வரம்பு (Limit) விதிக்கப்பட்டுள்ளது. “இந்தச் சலுகை பொதுமக்களுக்கானதே அன்றி, வியாபாரிகள் மொத்தமாக கொள்வனவு செய்வதற்கானது அல்ல” என அமைச்சர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதிர்ஷ்டலாபக் குலுக்கல்: கார் வெல்லும் வாய்ப்பு

விலைக்கழிவுகளுக்கு மேலதிகமாக, சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய பரிசுத் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டலாபக் குலுக்கலுக்கான கூப்பன் ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் சதொசவிற்கு பொருட்கள் வாங்க வருபவர்கள், ஒரு காரையோ அல்லது மோட்டார் சைக்கிளையோ பரிசாகப் பெற்று வீடு திரும்பும் வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.