ரிதிமாலியெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அராவ பொலிஸ் பிரிவில் மகாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அராவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று அராவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் 47 வயதுடைய நபர் ஒருவரும் அராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப் படவுள்ளதாக அராவ பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை அராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா