டீ. சந்ரு
நானுஓயா – கிரிமெட்டிய தோட்டப் பகுதியில் ஆறொன்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போய் இருந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
டெஸ்போர்ட் மேல்பிரிவைச் சேர்ந்த 19 வயதான இளைஞரொருவரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார்.
கிளாரண்டன் பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்து குறித்த இளைஞர், நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்தபோது இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்து இடத்தில் இதற்கு முன்னதாக, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சுமார் 4 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரென பிரதேசவாசிகள் தெரவிக்கின்றனர்.