மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்டைந்துள்ளது.
நேற்று 21 ம் திகதி மதியம் ஆரம்பித்த கன மழை காரணமாக ஹட்டன் ,நோர்வூட் ,போர்ட்டைஸ் ,எல்பியன் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெறுகினால் லயன் குடியிருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு ,நாவலப்பிட்டி நகரிலும் வெள்ளநீர் நிரம்பியதால் பயணிகள்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் பசறை பகுதியில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தோட்ட பகுதிகளில் வடிகால் அமைப்புகளை தோட்ட நிர்வாகம் சரியாக சீரமைக்கத்தாதன் காரணகமாக மழை வெள்ளம் வீடுகளுக்குள் வருவதை தவிர்க்கமுடியாத விடயமாக இருக்கின்றது என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .
