கண்டி – கட்டுகஸ்தோட்டை – குஹகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (04) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
