நாவலப்பிட்டியில் பாடசாலை வேன் விபத்து: 13 மாணவர்கள் காயம்
நாவலப்பிட்டி, கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி (வேன்) ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கோர விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
காயமடைந்தவர்கள் அனைவரும் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
