மலையக மக்களின் காணி உரிமைகளை வென்றெடுப்பது குறித்தும், அது தொடர்பாக அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் லிந்துலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவனான பிரேமராஜா கார்கி வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் நடைபவனியொன்றை ஆரம்பித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் இருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றுக்குத் தனது கோரிக்கை அடங்கிய கடிதங்களைக் கையளிப்பதற்காக இந்த 140 கிலோமீட்டர் தூர நடைபவனியை அவர் முன்னெடுத்துள்ளார்.
தனது வயதையும் பொருட்படுத்தாமல் மலையக சமூகத்தின் வாழ்வாதார மற்றும் நில உரிமைகளுக்காகப் புறப்பட்டுள்ள அச்சிறுவனின் இந்தத் துணிச்சலான முயற்சி, மலையக மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் இடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆதரவையும் ஏற்படுத்தியுள்ளது.
