மஸ்கெலியாவில் சோகம்: பலாக்காய் பறிக்கச் சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து பலி!
இச் சம்பவம் இன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது எனவும் மரணித்தவர் 68 வயது உடைய முத்துராமன் கிருஷ்ணசாமி எனவும் தெரிவித்தார்.தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய போது தனது விவசாய தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் உள்ள பலா காயை பிடுங்கி வர சென்ற வேளையில் மரத்தில் ஏறி தவரி விழுந்த வேலையில் மரத்தின் கீழ் பகுதியில் இருந்த கிணற்றில் விழுந்த மரணம் அடைந்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ கிடங்கில் வைக்கபட்டுள்ளது.
நாளை காலை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க படும் என்று மேலும் தெரிவிதித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.
