மலையகப் பிரதேசத்தில் “கல்விக்கு கரம்b கொடுப்போம் ” அதேபோல ” உணவு கொடுப்போம் பசித்தீர்போம் ” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இயங்கி வரும் கருணை இல்லம் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டினுடைய இடர்பாடான பொருளாதார சூழ்நிலையிலும் பதுளை, பசறை, நுவரெலியா, தலவாக்கலை, பூண்டுலோயா, நாவலப்பிட்டி, குருநாகல், அவிசாவளை, வட்டவளை, அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, மன்ராசி முதலான பல பிரதேசங்களை உள்ளடக்கிய தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளை தாண்டிய மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் விசேட அதிதிகளாக மனித உரிமைகள் இயக்குனர் டி. எல். சார்ஸ் மற்றும் அமைப்பின் அங்கத்தினர்கள், விஷ்ணு அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தராஜ் ஆகியோருடன் தலவாக்கலை, லிந்துல பொலிஸ் நிலையங்களின் பிரதான பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்போடு கருணை இல்லத்தின் தலைவர் திரு எஸ். செல்வகுமார், செயலாளர் சான்சதீஷ், பொருளாளர் சுதர்சன், அவர்களுடன் கருணை இல்லத்தின் அங்கத்தினர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இரண்டு வருட கால கருணை இல்லத்தின் சமூக சேவை பலவற்றில் uதங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய அங்கத்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
– சரத், கிரோஷன்