அமெரிக்க டொலருக்கு நிகராக கடந்த சில நாட்களாக தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, இன்று (10) மீண்டும் கணிசமான அளவில் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளன.
இன்றைய நாணய மாற்று வீதங்கள்:
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை: ரூ. 324.66
அமெரிக்க டொலரின் விற்பனை விலை: ரூ. 335.39
கடந்த வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்றைய தினம் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் உள்நாட்டு சந்தையிலும், இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
