மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம்- அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம்தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில்
அஞ்சாமை தந்தெமக்கு ஆறுதலைத் தரும் எம் அன்னை
நெஞ்சகத்தில் வீற்றிருந்து துணிவினையே தந்தருள்வாள்
அறவழியில் வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்
தஞ்சமென்று வருபவர்கள் குறை போக்கும் எம் அன்னை
என்றும் உடனிருந்து நன்மைகளைச் செய்திடுவாள்
நேர்வழியில் வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்
நெஞ்சினிலே உறைந்திருந்து நேர் வழியைக் காட்டும் எம் அன்னை
நெருங்கி வந்து உடனிருந்து நேர்வழியைக் காட்டிடுவாள்
துணையிருந்து வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்
மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் எம் அன்னை
மாண்புடனே வாழ்வதற்கு உரிய வழி காட்டிடுவாள்
மனத்திலே அமைதிதந்து நல்ல மனம்தந்தெம்மை வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்
தெய்வத் திருமகளாய்க் காட்சி தரும் எம் அன்னை
தெளிவான அறிவுதந்து நேர் வழியைக் காட்டிடுவாள்
தொல்லையில்லா வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்
நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் எம் அன்னை
நலங்கள் தந்து நல்வாழ்வின் வழியைக் காட்டிடுவாள்
நிம்மதியாய் வாழ வழிகாட்டி வாழச் செய்யும் அன்னை
பன்மூரில் கோயில் கொண்டாள் பணிந்து அவள் அருள் பெறுவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.