பூனாகளையில் சோகம் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்,
தோட்ட உதவி முகாமையாளர் விடுதி / ( பங்களா) மற்றும் விவசாய நில பராமரிப்பாளரான *கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி* -தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்குண்டு, *15/06/2026* அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஓய்வுபெற்ற தொழிலாளர் என்பதுடன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இச்சம்பவம் தொடர்பாக லியங்காவெல பொலிசார்* பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி அவர்களின் உடல், சட்ட வைத்திய பரிசோதனைக்காக *தியத்தலாவ பொது வைத்தியசாலையில்* இரு தினங்களாக வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று பூனாகலை தோட்ட மயானத்தில்* இடம்பெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி நமது செய்தியாளர், (தலவாக்கலை குணா )
