Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுரேஷ் சலேயின் போன், லேப்டாப் பாஸ்வேர்டுகளை ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை

சுரேஷ் சலேயின் போன், லேப்டாப் பாஸ்வேர்டுகளை ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ThanaBy ThanaJuly 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமக்கு எதிரான விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரி சுரேஷ் சலே அண்மையில் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.

தொடர் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டது.

மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுரேஷ் சலே உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது வரை வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் (Cardiology Unit) சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், இன்று (01) நீதிமன்ற உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைவாக, அவர் மேற்கொண்டு வந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.