வரி விதிப்பு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக இன்று பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதுளை பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இருந்து நடைபவனியாக பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பதுளை-கொழும் வீதி வழியாக இந்நடைபவணி முன்னெடுக்கப்பட்டு, பதுளை பொது வைத்திய சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா

