கேகாலை மாவட்டம் புளத்கொஹுப்பிடிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயல உடுவ தேதுகல பிரதேசத்தில் தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் மிருகங்கள் வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த பொறியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருக்கு போராடுவதை இன்று காலை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் வன ஜீவராசி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். அதன் போது வருகை தந்த வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் சிறுத்தை புலியை மீட்க முயற்சி எடுத்த போதிலும் முயற்சி பலனின்றி புலி பரிதாபமாக உயிரிழந்தது.
வன ஜீவராசி திணைக்களத்தின் அதிகாரிகள் உயிரிழந்த புலியின் உடலை புளத்கோபிட்டிய மிருக வைத்திய அதிகாரியிடம் சென்று சிறுத்தை புலியின் உடலை மேலதிக பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.