பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு
33ஆவது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மாநாட்டில் பங்கேற்பதற்காக மணிலாவில் தங்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜூலை 23ஆம் திகதி பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியேராவை (Mauro Vieira) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இலங்கை மற்றும் பிரேசில் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். குறிப்பாக, விவசாயத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கரும்புத் தொழில்துறையின் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரேசில் முன்வந்துள்ளமைக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
