கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.**
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியవந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
