Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் விற்பனை: புதிய பண மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!

August 17, 2026

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

August 17, 2026

கொழும்பில் சோகம்: அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!

August 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிநவீன உபகரண வசதிகள்
இலங்கை

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிநவீன உபகரண வசதிகள்

ThanaBy ThanaAugust 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் இலவச சுகாதார சேவைக் கட்டமைப்பில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறனானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அவ்வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலையில் 570 மில்லியன் ரூபாய் (ரூபா 570,000,000.00) பெறுமதியைக் கொண்ட மூன்று அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர் சிகிச்சை சேவைகளுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் பங்கேற்புடன் இன்று (15) முற்பகல் நடைபெற்றது.

இதற்கமைய, புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பின்வரும் பிரிவுகள் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன:

இதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு (Cardiac Catheterization Laboratory) – 200 மில்லியன் ரூபாய்
மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பிரிவு (Mammography Unit) – 180 மில்லியன் ரூபாய்
சிடி ஸ்கேன் பிரிவு (CT Scanner System) – 190 மில்லியன் ரூபாய்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பௌதீக வள அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் விற்பனை: புதிய பண மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!

    August 17, 2026

    சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

    August 17, 2026

    கொழும்பில் சோகம்: அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!

    August 17, 2026

    எல்ல பிரதேச அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பிரம்மாண்ட திட்டங்கள்

    August 17, 2026
    Editors Picks

    ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் விற்பனை: புதிய பண மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!

    August 17, 2026

    சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

    August 17, 2026

    கொழும்பில் சோகம்: அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!

    August 17, 2026

    இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!

    August 17, 2026

    ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் விற்பனை: புதிய பண மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!

    August 17, 2026

    சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

    August 17, 2026

    கொழும்பில் சோகம்: அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!

    August 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.