இதுவரை சிங்கள மொழி மூலமான படைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மதிப்புமிக்க ‘விதர்சனா’ (Vidarshana) இலக்கிய விருது, வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ் படைப்பாளி ஒருவருக்கு வழங்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
கைப்பிரதி சிறுகதை ஆக்கத்திற்காக, மலையகத்தைச் சேர்ந்த திறைமை வாய்ந்த படைப்பாளி சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கோலாகலமான விருது வழங்கும் விழாவில் இந்தச் சிறப்பிடம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு மலையக ஊடக நெட்வொர்க் (Malayagam Media Network) சார்பாக எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
