ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் உடப்புஸ்ஸலாவ – அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலய மாணவர்கள் 13 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
உடப்புஸ்ஸலாவ, அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலயம் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரே தடவையில் 13 மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடையச் செய்து, பாடசாலை வரலாற்றிலும் பிராந்திய மட்டத்திலும் மகத்தான வரலாற்றுச் சாதனையைப் பதிவுசெய்துள்ளது.
இப்பரீட்சையில் V. சக்சயன் 155 புள்ளிகளையும், C. அனுக்சன் மற்றும் V. விலோசனா ஆகியோர் தலா 152 புள்ளிகளையும், A. ரித்திக்சன் 148 புள்ளிகளையும், K. ருபக்ஸன் 144 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். மேலும், P. சர்மேஷ் மற்றும் M. ரிக்காஸ் ஆகியோர் தலா 142 புள்ளிகளையும், M. டிலுசியா மற்றும் M. அதினேஷ் ஆகியோர் தலா 141 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் P. தனூஸ்கர் 139 புள்ளிகளையும், P. பிரசன்யா 137 புள்ளிகளையும், N. யசீனி யுவந்திகா 136 புள்ளிகளையும், N. கெவீஷ் 133 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன், 70 புள்ளிகளுக்கு மேல் 35 மாணவர்கள் பெற்றுள்ள நிலையில், பாடசாலையின் மொத்த சித்தி சதவீதம் 88 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு வழிநடத்திய பாடசாலை அதிபர் ரவீந்திரன், மாணவர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற வகுப்பாசிரியர் S. தமிழரசி விஜயகாந்தன், இணைந்து செயற்பட்ட ஆசிரியர் குழாம் மற்றும் பூரண ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோருக்கு பாடசாலையின் உபஅதிபர் மற்றும் சமூகத்தினர் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


