நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புரூக்சைட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி நனிகா, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 152 புள்ளிகளைப் பெற்றுப் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
செல்வகுமார் – ஜெயந்திமாலா தம்பதியினரின் அன்பு மகளான நனிகா, பல்வேறு பொருளாதாரச் சவால்களையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு, மனம் தளராது இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
சூழ்நிலைகள் எத்தகையதாக இருப்பினும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றியை ஈட்ட முடியும் என்பதற்கு இம்மாணவியின் சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மாணவியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

