மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 8) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குள் கடந்த 31 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையிலிருந்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரை வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
