குழந்தைகள் உட்தொடுகை: ‘நல்ல தொடுகை, கெட்ட தொடுகை’யை தாண்டிய குழந்தையின் சம்மதம் – துஷாரா விக்ரமநாயக்க கருத்து!
பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நல்ல தொடுகை, கெட்ட தொடுகை’ (Good touch, bad touch) என்ற கருத்தாக்கத்திற்கு அப்பால், எந்தவொரு உடல்ரீதியான தொடுகைக்கும் முன்பாகக் குழந்தையின் தனிப்பட்ட சம்மதம் பெறப்படுவதே மிக முக்கியம் என சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர் டொக்டர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளம் ஒன்றில் அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட இரண்டு புகைப்படங்களை இணைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் விருப்பமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல்ரீதியான தொடர்பும் பொருத்தமற்றதாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பதிவில் இடம்பெற்றுள்ள முதல் புகைப்படத்தில் உள்ள ஒரு தொடர்பை விமர்சித்துள்ள அவர், அது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இலங்கையில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பிலான பரந்த கவலைகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது புகைப்படம் தொடர்பில் குறிப்பிடுகையில், ‘ஸ்ரோப் சைட் குரூயல்டி’ (Stop Child Cruelty Trust) அமைப்பினரால் சுமார் 40,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறுவன் ஒருவனின் தோள்மீது கை வைப்பதற்கு முன்னர், “நான் என் கைகளை உன் தோள்மீது வைக்கலாமா?” என்று அனுமதிக் கோரியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வினாவைக்கேட்டு தான் ஆச்சரியமடைந்ததாகவும், குழந்தையின் சம்மத உரிமையை மதிப்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். தொடுகைகளை வெறுமனே ‘நல்லது’ அல்லது ‘கெட்டது’ என வகைப்படுத்துவதை விடுத்து, குழந்தையின் சம்மதத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியே சமூகத்திற்குச் சொல்லப்பட வேண்டும் என்றார்.
குழந்தைகளுக்குத் தமது சம்மதத்தைத் தெரிவிப்பதற்கான அல்லது மறுப்பதற்கான உரிமையை வழங்குவது அவர்களை வலுவூட்டுவதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக நிகழும் எந்தவொரு தொடுகையும் ‘கெட்ட தொடுகையாக’ மாறி, அவர்களின் உரிமைகள் மீறப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்புப்புக் கொள்கையை முறையாகச் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ள அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ‘வேண்டாம்’ என்று சொல்லும் உரிமை குறித்த சரியான புரிதலின்றி முன்னெடுக்கப்படும் சிறுவர் பாதுகாப்பு முயற்சிகளின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், வயதுக்குப் பொருத்தமான பாலியல் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது குறித்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரியவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் டொக்டர் துஷாரா விக்ரமநாயக்க கோரிக்கை விடுத்துநல்ல தொடுகை, கெட்ட தொடுகை’யை தாண்டிய குழந்தையின் சம்மதம் -ள்ளார்.
