பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பாடசாலை அபிவிருத்தி சங்க
பொதுக்கூட்டம் அதிபர் எஸ். ராஜேந்திரா தலைமையில் பசறை வலய கல்வி பணிமனையின் திட்டமிடல் உதவி கல்வி பணிப்பாளர் கே.மோகனேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்க புதிய நிர்வாகக்குழு தெரிவுசெய்யப்பட்டது. அத்தோடு பாடசாலையின்
வருடாந்த செயற்பாட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் , பழைய மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
நடராஜா மலர்வேந்தன்