வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் இன்று பிற்பகல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையிலிருந்த மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து வந்து தாக்கியதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை, சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

