நடைமுறைப்படுத்தப்படும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹிணி குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் அவர்கள் நேற்று (22) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
