Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!
மலையகம்

மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!

ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!

​மாத்தளை கல்வி வலையத்திற்குட்பட்ட கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் தொழில்முயற்சி, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் நடைமுறைப் பொருளாதார அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிறுவர் சந்தை சிறப்பாக நடைபெற்றது.

​பாடசாலை பதில் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில், உதவி அதிபர் அழகர் அவர்களின் பங்கேற்போடு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

​பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இச்சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பழவகைகள், குளிர்பானங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய பல்வேறு விற்பனைச் சாவடிகளை அமைத்திருந்தனர்.

​பொருட்களைத் தயாரிப்பது முதல் விலையை நிர்ணயித்தல், வாடிக்கையாளர்களை உபசரித்தல் மற்றும் வரவு-செலவுகளைப் பதிவிடுவது வரை அனைத்துச் செயற்பாடுகளையும் மாணவர்களே முன்னெடுத்தனர். இதன்மூலம் வகுப்பறை அறிவை நடைமுறையில் செயல்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

​இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

​கல்வி என்பது ஏட்டுச்சுரையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைத்திறனையும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் என்பதற்கு இச்சிறுவர் சந்தை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தீபன்ராஜ்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது

    September 25, 2026

    கடும் காற்றுடன் பெய்யும் மழையால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

    September 25, 2026

    பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது-பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை

    September 25, 2026
    Editors Picks

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.