புஸ்ஸல்லாவ சோகமாவத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை மலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.