பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னுகை தோட்டம் 3 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்ட விரோதமாக முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது சட்ட விரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா