அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 40வது கராத்தே போட்டிகளில், ஹட்டன் ஸ்ரீ பாத மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவச் சகோதர-சகோதரி இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாத்தறை கொட்டவில விளையாட்டரங்கில் நடைபெற்ற இத்தொடரில், கே.எம். இஷினி எனாரா புஞ்சிபண்டா மற்றும் கே.எம்.எஸ்.வி. ஹித்தைஸி புஞ்சிபண்டா ஆகிய இருவரும் காத்தா பிரிவில் தங்கப் பதக்கங்களையும், குமிதே பிரிவில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்துள்ளனர்.
இதனிடையே, இத்தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் கே.எம். இஷினி தட்டிச் சென்றுள்ளார். ஹட்டன் கல்வி வலயத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த மாணவச் சாதனையாளர்களுக்குப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
