தலவாக்கலை – ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, அதன் களப்பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளன.
மத்திய மாகாண சபையின் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான சுந்தரராஜா சுரேஷ் மற்றும் கோவிந்தராஜ் நேசமலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்தினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவிற்கமையவே இந்நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து பார்வையிடும் நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்த், பிரதேச சபை உறுப்பினர்களான சுந்தரராஜ் சுரேஷ் மற்றும் கோவிந்தராஜ் நேசமலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
