‘அக்போ’ என்ற காட்டு யானையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 19) அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நாச்சியாதீவு உபதேவ வனப்பகுதியில் இலங்கை இராணுவ வீரர்களின் உதவியுடன் அந்த யானை கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றாடல் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமானத் துணைத் தளபதி சம்பத் துயகொந்தவின் அறிவுறுத்தல்களின் பேரில், இத்தேடுதல் நடவடிக்கையில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் ஒரு விசேட அணியை அனுப்பியது.
தேடுதல் நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் 30 இராணுவ வீரர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டது. தேடுதல் பணியை விரைவுபடுத்துவதற்காக பின்னர் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
வனவிலங்கு அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பணியாற்றிய இராணுவ வீரர்கள், ‘அக்போ’ என்ற காட்டு யானையைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கைக்கு உதவினர்.
