“நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய அமைப்பின் (NSO) கோரிக்கையை ஏற்றே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில் தலா ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.”
