அனுராதபுரம் – ரம்பேவா பகுதியில் நெல் வயலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் மீது மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
