ACT அமைப்பின் 2023 ஆண்டுக்கான கன்னி தலைமைத்துவ பயிற்சி பட்டறை.
ACT Canada பூரண அனுசரணையுடன் ACT Sri Lanka அமைப்பின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை 05.03.2023 காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தரம் 09 -12 வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இப்பயிற்சி பட்டறை ஹப்புத்தளை மத்திய கல்லூரி அதிபர் திரு. சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கினை ACT Sri Lanka அமைப்பின் உப.தலைவர் மற்றும் ஆலோசகர் இரா.சிவயோகன் அவர்களுடைய வழிகாட்டலுடன் வளவாளர்களாக ACT Sri Lanka ஊடகத்துறை பொருப்பாளர் ப.பவித்ரா MPhil, Phd® அபிவிருத்தி உத்தியோகத்தர், பேராதெனிய இந்து கல்லூரி, ACT Sri Lanka செயலாளர் செல்வி. இரா. திவ்யா BA, MPPG, Phd®
MEAL Coordinator @ world Vision Lanka ஆகியோரினால் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டதுடன் மாணவர்கள் மிக ஆர்வமாக இக்கருத்தரங்கில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.