Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

October 26, 2026

சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

October 26, 2026

மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

October 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொகவந்தலாவையில் நீண்டகாலமாக சாராயம் விற்றுவரும் கோவில் தர்மகர்த்தா கைது
மலையகம்

பொகவந்தலாவையில் நீண்டகாலமாக சாராயம் விற்றுவரும் கோவில் தர்மகர்த்தா கைது

ThanaBy ThanaOctober 26, 2026Updated:October 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொகவந்தலாவையில் நீண்டகாலமாக சாராயம் விற்றுவரும் கோவில் தர்மகர்த்தா கைது.

சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்துவந்த, பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவைச் சேர்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலின் பரிபாலனசபைத் தலைவர் (கோவில் தர்மகர்த்தா) சற்று முன்னர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களைத் தனக்கு வழங்குமாறு, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்ட இந்த நபர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பௌர்ணமி போயா தினத்தில் கெர்கஸ்வோல்ட் பகுதியில் அவர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஹட்டன் பொலிஸாருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சிவில் உடையில் கெர்கஸ்வோல்ட் பகுதிக்குச் சென்ற பொலிஸார், பௌர்ணமி போயா தினத்தில் கள் போத்தல்களுடன் (Toddy Bottles) நடமாடிய நபர் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின்போது, பூட்டியிருந்த அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கள் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின்போது, கோவில் தர்மகர்த்தாவே தனது வீட்டில் கள் போத்தல்களைப் பதுக்கி வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தர்மகர்த்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த இரு மாதங்களில் கோவில் தர்மகர்த்தாவின் வீட்டில் பொலிஸார் 3 தடவைகள் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்தபோது, மூன்று தடவைகளும் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத மதுபானங்களுடன் கோவில் தர்மகர்த்தா தற்போது இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தர்மகர்த்தாவை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொகவந்தலாவை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைய, பொலிஸ் உப பரிசோதகர் சம்பத், பொலிஸ் சார்ஜன்ட் கபில (10810), பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிஷங்க (34968), மதுரங்க (107574) ஆகியோர் இந்த விசேட கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கெர்கஸ்வோல்ட் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த நபர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பெண்கள் பெரும் பாதிப்புக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பாடசாலை மாணவர்கள் இடைவிலகளுக்கு சட்டவிரோத மதுபான விற்பனையும் காரணமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026
    Editors Picks

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

    October 26, 2026

    1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

    October 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.