நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள், முன்னர் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
