தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்திற்கு வந்துசேரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது விநாடிக்கு 2,800 கன அடி நீர் தெதுறு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள், ஆற்றின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் அவ்வப்போது வெளியிடப்படும் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
— நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்)
