இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*
இன்று (04/11/2026) இரத்தினபுரி மாவட்டத்தில் மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாகவும் உத்தியோகபூர்வமாகவும் நடைபெற்றது.
Power People Lanka Foundation நிறுவனத்தின் தலைவர் விஜேகுமார் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் விசேட கோரிக்கைக்கேற்ப, பிரேமசந்திரா அறக்கட்டளையின் தாராள நிதியுதவியுடன் இம்மண்டபம் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் Power People Lanka Foundation நிறுவனத்தின் தலைவர், பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர், அயகம பிரதேச சபையின் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர், மடபத்தர தோட்ட முகாமையாளர், அப்பகுதி இளைஞர் யுவதிகள், பாடசாலைச் சிறுவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது உரையாற்றிய பிரமுகர்கள், “கல்வியும் அதற்கான பௌதீகவள ஒதுக்கீடுமே சமூகத்தை உயர்த்த வலிமை சேர்க்கும்” என்ற உன்னதக் கோட்பாட்டை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
