பதுளை, தெமோதரை – எல்லந்த பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீடொன்றின் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்படின் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
