மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த மாத்திரைகளை விற்பனை செய்த ஆயுர்வேதக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, சந்தேக நபரிடமிருந்து அனுமதியின்றி விற்கப்பட்ட கஞ்சா கலந்த 386 ‘மதன மோதகம்’ மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தியதலாவைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
