சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவிட்டு தாயகம் திரும்பிய முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவரோடு இணைந்த கும்பலால் கடத்தப்பட்டுத் தவறான முறையில் நடத்தப்பட்டுள்ளார்.
நண்பியின் பொதியை ஒப்படைப்பதற்காகச் சென்ற அப்பெண்ணிற்கு போதைப்பானம் கொடுத்து மயக்கமடையச் செய்த அக்கும்பல், அவரிடமிருந்த 13 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வீசப்பட்ட அப்பெண்ணைக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு காவல்துறையினர் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
