கண்டி – கொழும்பு பிரதான வீதியில், கடுகண்ணாவைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாறை சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை (10) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டுநர்களை அவதானமாகச் செயற்படுமாறும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸாரும் உரிய அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் குறித்த மேலதிக விபரங்களும், வீதி சீரமைப்புப் பணிகள் பற்றிய தகவல்களும் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
