ரிதிமாலியெத்த பிரதேச சபைக்கு சொந்தமான UP PS 5483 கெப் ரக வாகனத்தில் ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளர் நிஷாந்த ஜயசுந்தர ஆந்தா உல்பத சந்தனாராமய விகாரைக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தி விட்டு விகாரைக்கு வழிபாட்டில் ஈடுபட்டு வாகனத்துக்கு அருகாமையில் வரும் போது நான்கு நபர்களால் குறித்த வாகனத்திற்கு கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாக ரிதிமாலியெத்த பொலிஸ் நிலையத்தில் தவிசாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் எவருக்கும் சேதங்கள் ஏற்படாத போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகளை ரிதிமாலியெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா