13 வயது சிறுமியை கடத்தி தப்பிச் செல்லும் நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரி பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிண்ணியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலஹிந்த, அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் தனது மகளின் சட்டத்திற்கு முரணாக அழைத்துச் சென்றுள்ளதாக சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேக நபரின் இரண்டு புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் விபரம் வருமாறு….
பெயர் – சுமித் குணவர்தன வயது – 47 வயது அடையாள அட்டை – 752496657V விலாசம் – தம்பகல்ல
இங்கினியாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 59 11 50
கிண்ணியாகலை பொலிஸ் – 0632 24 20 22\